search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆப்கானிஸ்தான்"

    அறிமுக டெஸ்டில் மிகக் குறைந்த ஓவர்களிலேயே ஆல்அவுட் ஆகிய முதல் அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.#INDvAFG
    ஐசிசி கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதி வழங்கியது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக விளையாட விரும்பியது.

    இந்தியாவும் ஆப்கானிஸ்தானுடன் முதல் டெஸ்டில் விளையாட சம்மதம் தெரிவித்தது. அதன்படி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 109 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டும், இசாந்த் ஷர்மா, ஜடேஜா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அதுபோக 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் மிகவும் குறைந்த ஓவர்களை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.



    வங்காள தேசம் 2-வது இன்னிங்சில் 46.3 ஓவரில் சுருண்டது மிகவும் குறைந்த ஓவர்களை சந்தித்த அணியாக இருந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் முதல் இடத்திற்கு வந்துள்ளது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 47.1 ஓவரில் சுருண்டு 3-வது இடத்திலும், அயர்லாந்து 47.2 ஓவரில் சுருண்டு 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 58.2 ஓவரில் சுருண்டு 5-வது இடத்திலும், இந்தியா 59.3 ஓவரில் சுருண்டு 6-வது இடத்திலும், நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 60.3 ஓவரில் சுருண்டு 7-வது இடத்திலும், இங்கிலாந்து 66.1 ஓவரில் சுருண்டு 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 68 ஓவரில் சுருண்டு 9-வது இடத்திலும் உள்ளது.
    அறிமுக டெஸ்டில் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 109 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வஃபாதர், ரஷித்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷேசாத் 18 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். ஜாவித் அஹ்மதி 1 ரன் எடுத்த நிலையில் இசாந்த சர்மா பந்தில் க்ளீன் போல்டானார்.



    அடுத்து வந்த ரஹ்மத் ஷாவை எல்பிடபிள்யூ மூலம் உமேஷ் யாதவ் வெளியேற்றினார். விக்கெட் கீப்பர் அஃப்சர் சசாய் 6 ரன் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    அதன்பின் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை இழந்து வந்தது. 10-வது நபராக களம் இறங்கிய முஜீப் உர் ரஹ்மான் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார். முகமது நபி அதிகபட்சமாக 24 ரன்கள் சேர்க்க ஆப்கானிஸ்தான் 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 109 ரன்னில் சுருண்டது.



    இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டும், ஜடேஜா, இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் 365 ரன்கள் குறைவாக இருந்ததால், பாலோ ஆன் ஆனது.

    இந்தியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமல் பாலோ-ஆன கொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளினார் அஸ்வின். #INDvAFG #Ashwin
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்த, அதன்பின் அஸ்வின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை அள்ள ஆரம்பித்தார்.

    அவர் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இந்த டெஸ்டிற்கு முன் அஸ்வின் 57 டெஸ்ட் போட்டியில் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இன்றைக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.



    ஜாகீர் கான் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 4-வது இடத்தில் இருந்தார். தற்போது அஸ்வின் 4-வது இடத்திற்கு முன்னேறி ஜாகீர் கானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளியுள்ளார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் கும்ப்ளே முதல் இடத்திலும் உள்ளனர்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ரஹ்மத் ஷாவை வீழ்த்தியதன் மூலம் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் உமேஷ் யாதவ் இடம்பிடித்தார். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வஃபாதர், ரஷித்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. 9-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ரஹ்மத் ஷா 14 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.

    ரஹ்மத் ஷா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் கபில்தேவ் (434), ஜாகிர்கான் (311), ஸ்ரீநாத் (236), இசாந்த் ஷர்மா (236), முகமது ஷமி (110), கே காவ்ரி (109), இர்பான் பதான் (100) ஆகியோர் 100 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.
    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #INDvAFG
    பெங்களூரு:

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் இடம்பிடித்தனர்.

    தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் முதல்நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே சதம் அடித்து அசத்தினார்.

    தவான் சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவரில் 158 ரன்கள் குவித்திருந்தது. தவான் 104 ரன்னுடனும், முரளி விஜய் 41 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், தவான் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு தவான்- முரளி விஜய் ஜோடி 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது.

    2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன்பின் விஜய் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். முரளி விஜய் சத்ததை நெருங்கிய நேரத்தில் மழை குறுக்கீட்டது. இதனால் இந்தியா 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்கள் எடுத்திருந்தார்.

    மழை நீடித்ததால் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் 99 ரன் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் முரளி விஜய் 143 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் இந்தியாவின் ஸ்கோர் 105 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். 280 ரன்னில் இந்த ஜோடி பிரிந்தது.

    அதன்பின் வந்த புஜாரா 35 ரன்னிலும், ரகானே 10 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். சுமார் 8 வருடத்திற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 



    இன்று காலை இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. அஷ்வின் 18 ரன்களும் அவருக்கு அடுத்து இறங்கிய ஜடேஜா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா இறுதி கட்டத்தில் நிதானமாக விளையாடி 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

    இதனை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது. 
    அம்பயர் விக்கெட் கொடுக்க மறுத்ததால் 24 ரன்னில் இருந்து தப்பிய தவான் சதத்துடன் சாதனையும் படைத்துள்ளார். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் உற்சாகத்துடன் களம் இறங்கினார்கள். இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வஃபாதர், யாமின் அஹ்மத்சாய் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதலை தொடங்கினார்கள்.

    10-வது ஓவரை வஃபாதர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்து தவானின் பேடை தாக்கியது. ஆனால் பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகிச்செல்லும் என்பதால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரிவியூ கேட்க ஆர்வம் காட்டவில்லை.

    அடுத்த பந்தை ஆஃப்ஸ்டம்பிற்கு வெளியே பவுன்சராக வீசினார். தவான் பேட்டை சற்று தூக்கி தடுக்க முயன்றார். பந்து பேட்டை உரசியபடி விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் அடைந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவுட் அப்பீல் கேட்டனர். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.



    உறுதியாக பேட்டில் பட்டதா? என்பதை யூகிக்க முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரிவியூ கேட்க விரும்பவில்லை. ஆனால் ரீபிளே-யின்போது அல்ட்ராஎட்ஜ் டெக்னாலஜியில் பந்து பேட்டில் உரசியது தெளிவாக தெரிந்தது. இதனால் வஃபாதர் முதல் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார்.

    அப்போது தவான் 33 பந்தில் 24 ரன்கள் எடுத்திருந்தார். நடுவர் கருணையால் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்ததுடன், மதிய உணவு இடைவேளைக்கும் சதம் அடித்த 6-வது வீரரும், இந்தியாவின் முதல் வீரரும் என்ற சாதனையை தவான் படைத்துள்ளார்.
    தவான், விஜய் சதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் இடம்பிடித்தனர்.

    தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் முதல்நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே சதம் அடித்து அசத்தினார்.

    தவான் சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவரில் 158 ரன்கள் குவித்திருந்தது. தவான் 104 ரன்னுடனும், முரளி விஜய் 41 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், தவான் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு தவான்- முரளி விஜய் ஜோடி 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது.

    2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன்பின் விஜய் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். முரளி விஜய் சத்ததை நெருங்கிய நேரத்தில் மழை குறுக்கீட்டது. இதனால் இந்தியா 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்கள் எடுத்திருந்தார்.



    மழை நீடித்ததால் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் 99 ரன் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் முரளி விஜய் 143 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் இந்தியாவின் ஸ்கோர் 105 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். 280 ரன்னில் இந்த ஜோடி பிரிந்தது.



    அதன்பின் வந்த புஜாரா 35 ரன்னிலும், ரகானே 10 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். சுமார் 8 வருடத்திற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 2 விக்கெட்டும், வாஃபாதர், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 64 பந்தில் 50 ரன்னைத் தொடடது. தவான் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 19.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    தொடக்க வீரர் தவான் 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் குவித்தது. தவான் 104 ரன்களுடனும், முரளி விஜய் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தவான் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை யாமின் அஹ்மத்சாய் வீசினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய என்ற வீரர் பெருமையை பெற்றார்.



    அடுத்து முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் சதத்தை நெருங்கிய வேளையில் மழை குறுக்கீட்டது.

    இதனால் இந்தியா 45.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.
    இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்த கருண் நாயர், தற்போது முன்னேற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். #INDvAFG
    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர். 26 வயதாகும் இவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மொகாலி டெஸ்டில் அறிமுகமானார். மொகாலி டெஸ்டில் நான்கு ரன்களும், அதன்பின் நடைபெற்ற மும்பை டெஸ்டில் 13 ரன்களும் அடித்தார். சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-வது டெஸ்டிலேயே முச்சதம் அடித்து அசத்தினார். அத்துடன் 303 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேவாக்குடன் முச்சதம் அடித்த வீரர் பட்டியலில் இடம்பிடித்தார்.

    அதன்பின் ஆஸ்திரேலியா தொடரின்போது பெங்களூரு டெஸ்டில் 26 ரன்களும், ராஞ்சி டெஸ்டில் 23 ரன்களும், தரம்சாலா டெஸ்டில் 5 ரன்களும் மட்டுமே எடுத்தார். இதனால் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை.

    இந்தியா வருகிற 14-ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பு கெட்டியாக பிடித்துக் கொள்ள வீரும்பும் அவர், இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன் என்ற தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கருண் நாயர் கூறுகையில் ‘‘நான் தற்போது பிட்டராகியுள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியில் இடம்பெறவில்லை. இந்த நேரத்தில் அதிக சிரமம் எடுத்து என்னுடைய திறமையை வளர்த்துள்ளேன். பேட்டிங் மற்றும் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தினேன். உள்ளூர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்துள்ளேன். இரண்டு வருடத்திற்கு முன் நான் இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன்’’ என்றார்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு சவாலான ஆடுகளம் தயார் செய்யப்படும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். #INDvAFG
    சர்வதேச கிரிக்கெட் வாரியம் கடந்த வருடம் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. ஆப்கான் கிரிக்கெட்டிற்கு உதவிகள் செய்து வரும் இந்தியாவிற்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் விளையாட அந்த அணி விரும்பியது. இதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது.

    அதன்படி இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இந்த டெஸ்டிற்காக சின்னசாமி மைதானத்தில் பிட்ச் தயார் செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் பிட்ச் பராமரிப்பாளர் இரவு பகலாக தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரண்டு அணிகளிலும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் ஆடுகளம் யாருக்கு சாதகமான வகையில் தயாரிக்கப்படும் என்று விவாதம் தொடங்கியுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் போன்றோர் அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

    இந்நிலையில் ஆடுகளம் ஐந்து நாட்கள் போட்டி நடைபெறும் வகையில் சவாலானதாக இருக்கும் என கர்நாடக கிரிக்கெட் சங்க ஆடுகளம் பராபரிப்பாளர் கே ஸ்ரீராம் கூறியுள்ளார்.



    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்டிற்காக தயார் செய்யப்படும் ஆடுகளம் சிறந்ததாக இருக்கும். நாங்கள் இந்தியாவிற்காகவோ, ஆப்கானிஸ்தானிற்காகவோ ஆடுகளம் தயார் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால், சிறந்த கிரிக்கெட் ஆட்டமாக இருக்கும்.

    ஆடுகளத்தில் சற்று புற்கள் இருக்கும். நாட்கள் ஆகஆக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும். ஆட்டம் ஐந்து நாட்கள் நடைபெறும் வகையில் ஆடுகளம் இருக்கும். மழை அவ்வப்போது குறுக்கீடு செய்கிறது. அதை சமாளித்து தயார் செய்து வருகிறோம். எந்தவித நெறுடலும் இல்லாமல் ஆடுகளம் தயார் செய்து கொடுக்கப்படும்.
    கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா பங்கேற்பது சந்தேகம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் விருத்திமான் சகா. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் விளையாடியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதில் அவரின் விரலில் முறிவு ஏற்பட்டது.



    இந்த காயம் குணமடைய ஐந்து முதல் 6 வாரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகல் விரைவில் வெளியாகும். ஒருவேளை காயம் குணமடைய 6 வாரங்கள் தேவைப்பட்டால் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவது சந்தேகம்தான்.
    நாங்கள் இந்தியாவிற்கு எதிராகத்தான் விளையாடுகிறோம், விராட் கோலிக்கு அல்ல என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார். #INDvAFG
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்டில் விளையாடுவதற்கான அந்தஸ்தை கடந்த வருடம் பெற்றது. அந்த அணி வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுகிறது. இந்த டெஸ்ட் பெங்களூருவில் அடுத்த மாதம் 14-ந்தேதி நடக்கிறது.

    இந்தியா இங்கிலாந்துக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டியில் விளையாட இருக்கிறார்.

    இந்தியாவின் முன்னாள் வீரர்கள் பலர் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஏற்கவில்லை.

    இந்நிலையில் நாங்கள் இந்தியாவிற்கு எதிராகத்தான் விளையாடுகிறோம். விராட் கோலிக்கு எதிராக அல்ல என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்சாய் கூறுகையில் ‘‘அனைத்து இந்திய வீரர்களும் சிறந்த வீரர்கள். ஒவ்வொரு வீரர்களும் விராட் கோலியை போன்றவர்கள். நாங்கள் இந்தியாவுடன்தான் விளையாடுகிறோம், விராட் கோலியை எதிர்த்து இல்லை என்பதை நான் நம்புகிறேன்.

    இந்திய சூழ்நிலை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக நாங்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த மூன்று அல்லது நான்கு வருடத்தில் எங்கள் அணியின் காம்பினேசன் சிறப்பாக உள்ளது. நேர்மறையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வோம்’’ என்றார்.
    ×